"முதலாளித்துவம்" இந்த வார்த்தைகள் நமக்கு பல ஆண்டுகளாக பரிச்சையமாக இருந்தாலும், முதலாளித்துவம் தன் கொடூரமான அனுகுமுறைகளால் நாம் பாதிக்கப்பட்ட போதும் உழைக்கும் மக்கள் பலரும் அதை முறியடிப்பதில், மாற்றுவழியை பயன்படுத்துவதில் முரண்பட்டு நிற்கிறோம். இந்த முரண்பாடுகளுக்கு சிபிஐ, சிபிம் போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் பெரும் பங்கும் மறுப்பதற்கில்லை. தங்களுடைய தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களின் போர்குணத்தை மழுங்கடித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வது, முதலாளிக்கு கூஜா தூக்குவது, அவர்களோடு கைகோர்த்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து வந்துள்ளது. முதலாளிகளை எதிர்க்கும் அதேவேளையில் இந்த போலிகளை அடையாளம் கண்டு அவர்களின் பிழைப்புவாத சதியை முறியடிப்பதும் மிக அவசியமாகும்.
இன்று நாம் சந்தித்திருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம்? முதலாளித்துவம் என்ற புதைகுழியில் சிக்கி இந்த உலகமே விழி பிதுங்குகிறது. முதலாளித்துவத்தின் அடித்தளம் மூலதனத்திலும் போட்டிகள் நிறைந்த வணிகச்சுதந்திரத்திலுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மூலதனம் திரளும் வரையே முதலாளித்துவத்தின் வளர்ச்சி இருக்கும். இந்த மூலதனம் முதலாளிகளை உலகம் முழுவதிலும் தனக்கான சந்தைக்காக சுற்றித்திரிய வைக்கிறது. இன்று நாம் படும் அல்லல்களுகெல்லாம் காரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற வக்கிரக்கொள்கைகளின் ஊற்றுக்கண் மூலதனத்தின் பெருக்கத்திலே தான் உள்ளது. இவைதான் நம் நாட்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக்கி தொழில் போட்டியில் உள்நாட்டு தொழில்களையும் விவசாயத்தையும் அழித்து விட்டது. இப்போது நம் நாட்டில் நடைபெறும் உற்பத்தி நம்முடைய தேச நலனுக்கானது அல்ல, அவை பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்பவையாகவே உள்ளது. தொழில்துறையிலும் விவசாயத்திலும் சுயசார்பை இழந்ததன் காரணத்தால் தான் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு உலகின் பல்வேறு பகுதியிலும் அதிர்வலைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இந்த கொடூரமான நெருக்கடிகளால் எப்போதும் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களே, பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதுமாக மிகக்கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாளித்துவத்தின் கோர பிடிக்குள் இன்று உலகமே மூச்சுத்திணறி கொண்டிருக்கிறது. உலகத்தின் முதல் சோசலிச குடியரசை தந்திரம் செய்து வீழ்த்தி வீழ்ந்துவிட்டதாக கதை கட்டிவிட்ட முதலாளித்துவ நரிகளும் வால் ஸ்ட்ரீட்டின் அதிபதிகளும் இன்று தலையில் துண்டைப்போட்டு மக்களின் கண்களில் படாமல் மறைந்து மறைந்து போகின்றனர். முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியம் இன்று உலகிற்கு அளித்த கொடை எண்ணிலடங்காது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களின் தினசரி வருமானத்தை ஒரு டாலருக்கும் குறைவாக ஆக்கியது முதற்கொண்டு இங்கே இந்தியாவில் 83.4 கோடி இந்தியர்களின் தினசரி வருமானத்தை 20 ரூபாய்க்கும் கீழாக குறைத்திட்டது வரை பட்டியல் நீள்கிறது. நம் நாட்டின் விலைவாசி உயர்வுக்கு காரணமான முன்பேர வர்த்தக சூதாட்டத்தில் ஆரம்பித்து குறைந்த கூலி உழைப்புக்காக ஊதிப்பெருக்கி இப்போது வெடித்துக்கிடக்கும் ஐ.டி துறையாகட்டும் எல்லாம் நம் கண் முன்னே அப்பட்டமாய் நடந்துகொண்டுதானிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நரகத்திற்குள் தான் நடத்துகின்றனர். இதற்கு அவர்களுக்கு தெரிந்த காரணம் விதி, ஜாதகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இவை மட்டுமே. முதலாளித்துவத்தை வீழ்த்த ஊதிய உயர்வு போராட்டங்கள் நடத்துவதும், பட்டினி போராட்டம் இருப்பது, ஈரத்துணி கட்டி கோமாளித்தனம் செய்வதும் நாமம் போட்டுக்கொண்டு காட்சித் கொடுப்பதும் தான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும்வழி. எந்த ஓட்டுப்பொறுக்கிக்கட்சிகளும் முதலாளித்துவத்தை வீழ்த்தப்போவதில்லை, அதை வீழ்த்தாமல் இந்த சமுதாய சிக்கல்கள் தீரப்போவதில்லை. எனவே கோர பசி கொண்ட திமிங்கிலத்தை வீழ்த்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரண்டு போராடுவதே சிறந்த வழி ஒரே வழி.
Kathmandu: The Maoists in Nepal are racing ahead in the constituent assembly polls to the decide the future political system for the country, with the former rebels bagging nine of the eighteen seats declared so far and trends indicating the CPN-Maoist leading in 60 of the 240 constituencies
The CPN-Maoist, who ended their decade-long insurgency in 2006 and contested the polls for the first time on April 10, seems to be moving towards a possible majority, with the Nepali Congress bagging three and CPN-UML four seats and both leading in 12 constituencies each.
The election to the 601-seat Constituent Assembly is expected to abolish the 240-year-old monarchy and frame a new constitution for the Himalayan state.
The Terai-based Madhesi People's Rights Forum (MPRF), which had fielded 105 candidates, is leading in 10 seats. The Nepal Workers and Peasant Party, a regional formation, had won two assembly seats in Bhaktapur district.
Interestingly, CPN-UML is facing reversal in Kathmandu valley's three districts, Kathmandu, Lalitpur and Bhaktapur, considered a traditional communist stronghold.
Prime Minister Girija Prasad Koirala-led Nepali Congress, has bagged three seats in the Kathmandu valley so far and ahead in two other constituencies.
Three of the Maoists who won were ministers in the interim government: Krishna Bahadur Mahara, Paspha Bhusal and Dev Gurung.
A complete count of votes in all 240 constituencies is not expected to be over before the next week.
The good showing of Maoists is being seen as the peace bonus given by the people for coming to the mainstream politics by ending decade-long armed conflict that claimed at least 14,000 lives.
Courtesy: Sify.com
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் கீழே இமயத்தின் அடிவாரத்தில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னராட்சியால் பாதுகாக்கப்படும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையும், ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒழிந்து ஒரு மக்கள் குடியரசு மலரப் போகும் நாளுக்காக காத்திருக்கிறது நேபாளம்.
இந்தியா, சீனா என்ற இரு பெரும் நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் நேபாளம் ஒரு வளம் கொழிக்கும் நாடு. வற்றாத ஜீவநதிகளும் வளமான மண்ணும் இருந்த போதும் பாசன வசதிகள் செய்யப்படாததால் அங்கே விவசாயம் செழிக்கவில்லை. நாளொன்றுக்கு 80,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு நீர்வீழ்ச்சிகள் நிறைந்திருந்த போதும் மின் உற்பத்தி இல்லை. கனிவளங்களும் காட்டுவளமும் நிறைந்திருந்த போதும் அங்கே தொழில் வளம் இல்லை. சோமாலியாவுக்கு நிகரான வறுமை, 50% எழுத்தறிவின்மை, கிராமப்புறங்களில் தலைவிறித்தாடும் சாதிய ஒடுக்குமுறை, 13 வயதில் சிறுமிகளை மணமுடித்துக் கொடுக்கும் பெண்ணடிமைக் கொடுமை- இதுதான் நேபாளம்.
நாட்டையே தன்னுடைய பரம்பரைச் சொத்தாகக் கருதும் மன்னர்குலம், நேபாளத்தை உலக பணக்காரர்களின் உல்லாசபுரியாகவும், சூதாடிகளின் சொர்க்கமாகவும் மாற்றியிருக்கிறது. சர்வதேசக் கிரிமினல் சார்லஸ் சோப்ராஜீம், சிறுநீரகத் திருடன் அமித்குமாரும், கொலைகார சங்கராசாரியும் தமக்குப் பாதுகாப்பான புகலிடமாக நேபாளத்தைத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே மன்னராட்சியின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள முடியும். நேபாளதின் மக்களோ, வயிற்றுக்காக இந்தியா முழுவதும் அலைந்து திரிகிறார்கள். பங்களாக்களில் காவல் நிற்கிறார்கள். ஆண்டுதோறும் நேபாளத்தின் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் மும்பை சிவப்பு விள்க்கு பகுதியில் விலைபேசி விற்கப்படுகிறார்கள். 'உலகின் ஒரே இந்து அரசு' என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பீற்றிக் கொள்ளும் நேபாள நாட்டின் நிலை இதுதான்!
இந்தக் கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக பல பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள் நேபாள மக்கள். 1990-இல் எழுந்த ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தின் விளைவாக மன்னராட்சி, 'அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட மன்னராட்சியாக' வேடமணிந்து கொண்டது. இந்த அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை மன்னனுக்கு வழங்கியிருந்தது. எனவே, அடுத்த 12 ஆண்டுகளில் 12 முறை ஆட்சியை கலைத்தார், மன்னர். பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட அரசியல்வாதிகள் மன்னனிடம் சோரம் போயினர். மக்களிடம் செல்வாக்கிழந்தனர் .
இத்தகைய சூழலில், 1996-இல் மாவோயிஸ்டுகள் இரு குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். "மன்னராட்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். நேபாளம் ஒரு இந்து தேசம் என்பதை மாற்றி, மதச்சார்பற்ற குடியரசு என்று அறிவிக்க வேண்டும்" என்ற அவர்களது இரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆயுதப்போராட்டத்தை பிரகடனம் செய்தனர். நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையின் கீழ் குமுறிக்கொண்டிருந்த கிராமப்புற மக்களும் பழங்குடியினரும் செங்கொடியின் கீழ் அணிதிரண்டனர். மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு நாடெங்கும் பரவியது. கிராமப்புறங்களில் மக்கள் கமிட்டியின் அதிகாரம் நிறுவப்பட்டது. நிலச்சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற புரட்சிகர மாற்றங்கள் செயலுக்கு வந்தன. மன்னராட்சி செல்லாக்காசானது.
மாவோயிஸ்டுகளின் வெற்றி, மன்னராட்சியை அச்சுறுத்திக் கொண்டுருந்த காலக்கட்டத்தில் தான் மன்னர் பிரேந்திராவின் குடும்பத்தையே படுகொலை செய்து விட்டு அரியணையில் ஏறினான் ஞானேந்திரா. மாவோயிஸ்டுகளைத் துடைத்தெறியப் போவதாகக் கொக்கரித்தான். "நேபாளத்தில் கம்யூனிஸ்டு புரட்சியைத் தடுப்பது எப்படி?" என்று வாஷிங்டனில் மாநாடு நடத்தியது அமெரிக்கா. ஞானேந்திராவின் இராணுவத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை வழங்கியது இந்திய அரசு. அமெரிக்க இராணுவ அதிகாரிகள் நேபாள இராணுவத்திற்குப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் யாராலும் மாவோயிஸ்டுகளை ஒழிக்கவோ, மக்கள் எழுச்சியைத் தடுக்கவோ முடியவில்லை.
ஏப்ரல் 2006- இல் ஞானேந்திராவின் ஊரடங்குச் சட்டத்தையும் இராணுவத்தையும் மீறி, அரண்மனையை முற்றுகையிட்டார்கள் இலட்சக்கணக்கான மக்கள். மன்னராட்சியைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசும், அமெரிக்காவும் மேற்கொண்ட திரைமறைவு முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன. "மன்னராட்சி ஒழிக! அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து! உழுபவனுக்கே நிலம் சொந்தம்! " என்ற முழக்கங்கள் இமயத்தில் மோதி உலகெங்கும் எதிரொலித்தன. 19 நாட்கள் நேபாளத்தை உலுக்கிய இந்த மக்கள் எழுச்சி மன்னன் ஞானேந்திராவைச் சரணடைய வைத்தது. மாவோயிஸ்டுகளுடன் ஒரு ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தை நேபாளத்தின் நாடாளுமன்றக் கட்சிகளுக்கு ஏற்படுத்தியது. "இடைக்கால அரசியல் சட்டம், இடைக்கால அரசு, புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜனநாயகக் குடியரசு" என்று மாவோயிஸ்டுகள் முன்வைத்த முழக்கங்களை 7 நாடாளுமன்ற கட்சிகளும் ஏற்றுக்கொண்டதால், ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்து, இடைக்கால அரசில் இணைந்தார்கள் மாவோயிஸ்டுகள்.
மாபெரும் மக்கள் எழுச்சியால் தூக்கியெறியப்பட்ட மன்னராட்சியை கொல்லைப்புறம் வழியாக திணிப்பதற்கான சதிவேலைகளை அமெரிக்க இந்திய அரசுகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. நேபாளத்தின் தென் பகுதியில் மாதேசி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த நிராயுதபாணிகளான மாவோயிஸ்டு கட்சி உறுப்பினர்கள் 28 பேரை இந்திய எல்லைப் புறத்திலிருந்து கூலிப்படையை ஏவிக் கொலை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். "நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அதை இந்திய இராணுவம் கைகட்டி வெடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது" என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்திருக்கிறார் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா. இந்தச் சீர்குலைவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் இந்திய உளவுத்துறை துணை நிற்கிறது.
இத்தகைய சதிவேலைகளின் விளைவாக, ஜுன் 2007-ல் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நவ. 2007-க்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஏப்ரல் 2008-க்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இறையாண்மையும் தற்சார்பும் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக நேபாளம் உருவாக வேண்டும் என்பதே ஆகப் பெரும்பாண்மையான நேபாள மக்களின் விருப்பம். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் இந்திய ஆளும் வர்கங்களால் இதனை சகித்துக் கொள்ளமுடியவில்லை. நேபாளம் விடுதலை அடைந்தால் 'இந்திய நேபாள நட்புறவு ஓப்பந்தம்' எனும் அடிமை முறியின் மூலம் நேபாளத்தின் மீது தாங்கள் செலுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்கம் முடிந்து விடும் என்று அஞ்சுகிறது இந்திய அரசு. அந்நாட்டின் தொழிலையும் வணிகத்தையும் கட்டுப்படுத்தும் இந்தியத் தரகு முதலாளிகளும், பெரு வணிகர்களும் தாங்கள் அடித்து வரும் கொள்ளை முடிந்து விடுமோ என்று குமுறுகின்றனர். காங்கிரசு, பா.ஜா.க. கட்சிகளின் தலைமைப் பதவிகளில் அமர்ந்திருக்கும் குவாலியர், மேவார் அரச பரம்பரையினருக்கு நேபாள மன்னர் குடும்பத்துடன் மண உறவே இருப்பதால் அவர்கள் இரத்தப் பாசத்தால் துடிக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக மாவோயிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ், ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முழக்கங்களுடன் ஒரு ஜனநாயகப் புரட்சி நேபாளத்தில் வெற்றி பெற்றால், அது உடனே இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்ற பீதி இந்திய ஆளும் வர்கங்களைப் பிடித்து ஆட்டுகிறது.
ஏற்கனவே, தெற்காசியப் பகுதியில் மேலாதிக்கம் செய்து வரும் இந்திய அரசு, தற்போது அமெரிக்காவின் இராணுவ அடியாட்படையாக அவதாரமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இந்திய அரசு, சிக்கிம் நாட்டை இணைத்துக் கொண்டது; பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கியது; பிறகு இலங்கைக்குப் படை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. இன்றும் சிங்கள பேரினவாத அரசுக்கு இராணுவ உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நேபாளத்தின் சில கட்சிகளைத் தனது கைகூலிகளாக்கிக் கொண்டு, அந்நாட்டின் ஜனநாயகப் புரட்சியை நசுக்குவதற்காக இந்திய இராணுவம் தலையீடு செய்வத்ற்கான அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க அரசோ நேபாளத்தில் ஏற்கனவே வெளிப்படையாகத் தலையிடத் தொடங்கி விட்டது. ஆசியாவின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், சீனாவையும் ரசியாவையும் கட்டுப்படுத்தவும், நேபாளத்தில் கால் பதிக்கும் தருணத்துக்காக காத்திருக்கிறது அமெரிக்கா. நேபாள புரட்சி அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு சவால் விடுகிறது. புரட்சியின் வெற்றி தோற்றுவிக்கும் அதிர்வலை உலகெங்கும் பரவுமென்பதால் பதறுகிறது அமெரிக்கா. தோண்டிப் புதைத்துவிட்டதாக இறுமாந்திருந்த தருணத்தில், 'கம்யூனிச பூதம்' எவரெஸ்டின் மீது ஏறி நின்று எக்காளம் செய்வதை ஏகாதிபத்தியவாதிகளால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
அமெரிக்க வல்லரசு, இந்திய மேலாதிக்கம், இந்து மதவெறி பாசிஸ்டுகள், நேபாளத்தின் மன்னர்குலம் உள்ளிட்ட ஆளும் வர்க்கம்... என்று ஒரு பெரும் அணிவரிசையை எதிர்கொண்டு நிற்கிறது நேபாளம். கடந்த பத்து ஆண்டுகளில் 13,000 உயிர்களை பலியிட்டு புரட்சியை வெற்றியின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறார்கள் நேபாள மக்கள். அவர்கள் வெற்றி பெற வேண்டும். 21-ஆம் நூற்றாண்டின் முதல் புரட்சி எவரெஸ்டின் உச்சியிலிருந்து உலகைத் தட்டியெழுப்ப வேண்டும். ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்துக்கு எதிரான போரில் இந்தியத் துணைக்கண்டம் முன்நிற்க வேண்டும்.
நேபாளமும் இந்தியாவும் நிலப்பரப்பால் மட்டும் இணைந்திருக்கவில்லை. நாம் வரலாற்றாலும் பிணைக்கப்பட்டவர்கள். மன்னராட்சியின் கீழ் நேபாள மக்கள் அனுபவிக்கும் அதே நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைதான் 'மக்களாட்சியின்' கீழ் இந்திய மக்களும் அனுபவித்து வருகிறார்கள். நேபாளத்தின் இந்து அரசின் கீழ் அம்மக்கள் அனுபவித்துவரும் சாதிக்கொடுமைகளைத்தான், 'மதச்சார்பற்ற' இந்திய அரசின் கீழ் நம் நாட்டின் ஓடுக்கப்பட்ட சாதி மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
நேபாளத்தை சூறையாடும் இந்தியத் தரகு முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் தான் தனியார்மய தாராளமய கொள்கைகளின் மூலம் இந்திய மக்களையும் சூறையாடுகிறார்கள்.
நம்முடைய பொது எதிரிகள் அனைவரும் நேபாள மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள். நாம் நேபாள மக்களின் இறையாண்மைக்கு ஆதரவாகவும், ஜனநாயக புரட்சிக்கு ஆதரவாகவும் அணிவகுத்து நிற்க வேண்டும். இந்திய மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்!
இந்திய மேலதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்!
நேபாளத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை முறியடிபோம்!
தமது விதியை தாமே தெரிவு செய்து கொள்ளும் நேபாள மக்களின் உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!
நேபாள ஜனநாயக குடியரசுக்குத் துணை நிற்போம்!
பங்கேற்போர்:
தலைமை: சுப.தங்கராசு
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு,தமிழ்நாடு.
உறையாற்றுவோர்:
த.வெள்ளையன்
தலைவர்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் போரவை
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,திராவிட இயக்கத் தமிழர் போரவை
மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,தமிழ்நாடு
மற்றும் பலர்
சிறப்புறை:
பவன் பட்டேல்
பொதுச்செயலாளர்,
இந்திய-நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.
லட்சுமண் பந்த்
செயலர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்பு குழு,இந்தியா.
சி.பி.கஜீரேல்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள பொதுவுடைமைக் கட்சி,(மாவோயிஸ்டு)
நாள்: 19.02.08 மாலை 4 மணி
இடம்:பத்மராம் மகால்(ராம் தியேட்டர்),
83, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம்,சென்னை.
கண்டண ஆர்ப்பாட்டம்
குஜராத். .....
குஜராத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பி.ஜே.பி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளை தெகல்கா என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளி உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயலும் இந்த பாசிச கும்பலின் கொடூரமான கொலைகளை தனது உயிரையும் பணயம் வைத்து படம் பிடித்துள்ளது தெகல்கா நிறுவனம். முஸ்லிம் மக்களை கொன்று குவித்த விதத்தை இந்த மதவெறி நாய்களின் ஒப்புதல் வாக்குமூலமாக தருவதை அப்படியே படம் பிடித்து காட்டியப்பின்னும், இந்த வெறி நாய்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.
ஒரு கர்பினிப்யான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை கிழித்து அந்த சிசுவை இரண்டாக பிளந்து வீசியதை ஒரு காட்டுமிராண்டி ஒப்புக்கொள்கிறான், முஸ்லிம் பெண்கள் கொழுகொழுவென்று இருந்தார்கள், அவர்களை நாங்கள் புணர்ந்தோம் என்றும் இந்த நாய்கள் பெருமையுடன் கூறுகின்றன. இதை படிக்கும் போதே நமது உணர்வுகள் கொந்தளிக்க வில்லையா? இந்த நாய்களை கண்ட இடத்திலேயே கொன்று குவிக்க வேண்டாமா? உணர்வுள்ளவன் இந்த நாய்கள் மீது, ஒரு கல்லையாவது வீசாமல் இருக்க முடியுமா?
ஜெயா மாமிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கடைதிறக்கும் உச்ச நீதிமன்றம் (குடுமி மன்றம்) மோடி, அத்வானி, போன்ற பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பை கூட வீசாத மர்மம் என்ன?
இவ்வளவு ஆதாரங்களுக்கு பின்னும் எந்த ஓட்டுப் பொருக்கி அரசியல்வாதியும் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.
இந்நிலையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை கண்டித்தும், கைது செய்யக்கோரியும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் ஆர்ப்பாட்டமும், பார்ப்பன பாசிஸ்டுகளின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தின் முழக்கங்களை கீழே காணலாம்:
குஜராத் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் மோடியை - கைது செய்!
கொலைவெறியை தூண்டிய அத்வாணியை - கைது செய்!
பார்ப்பன மத வெறி கும்பலை - தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!
பெரியார் பிறந்த மண்ணிலே
பார்ப்பன மதவெறி கும்பலை
ஓழித்துக் கட்டுவோம்! ஓழித்துக் கட்டுவோம்!!
இந்து என்று சொல்லாதே!
பார்ப்பான் பின்னால் செல்லாதே!
இந்து என்று சொல்லாதே!
பார்ப்பான் பின்னால் செல்லாதே!
குஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த பார்ப்பன
மதவெறி கொலைகாரன் மோடி,அத்வாணி
வகையராக்களைகைது செய்! கைது செய்!!
மத்திய அரசே! மத்திய அரசே!!
தடை செய்! தடை செய்!!
பார்ப்பன பாசிஸ ஆர்.எஸ்.எஸ், பா.ஜா.க
இந்து முன்னணி, தேச துரோக கும்பலை
தடை செய்! தடை செய்!!
சேது சமுத்திர பந்துக்காக
ஞாயிற்றுக் கிழமையும் விசாரணை நடத்தும்
உச்சிக் குடுமி மன்றமே!
உச்ச நீதி மன்றமே!
குஜராத் முஸ்லீம்களை கொன்றதாக
வாக்கு மூலத்தை அள்ளி வீசுய
பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக
உன் உச்சிக் குடுமி ஆடாத
மர்மம் என்ன? மர்மம் என்ன?
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து
பச்சிளம் குழந்தையை வெளியில் எடுத்து
இரண்டாய் பிளந்து வீசிய
வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி,க்கு
பாடை கட்டுவோம்! பாடை கட்டுவோம்!!
சாதி ஆதிக்கமும் தீண்டாமையும்
இந்து மதத்தில் இல்லையென்று
கூசாமல் பொய் சொல்லும்
கொலைகாரன் ராமகோபாலனே,
சாதி, தீண்டாமையை நிலைநாட்டும்
மனுநீதி கீதையை
தீயிலிடத் தயாரா?
நாம் அனைவரும் இந்து என்று
பழங்குடி மக்களை அணிதிரட்டி
குஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலே
பழங்குடி மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை
ஆலயத்தின் அர்ச்சகராக
நியமிப்பாயா? நியமிப்பாயா?
நாமெல்லாம் இந்துக்கலென்றால்
சிதம்பரம் கோயில் தீட்சதரை
மாரியாத்தா கோயிலுக்கும்
மாரியாத்தா கோயில் பூசாரியை
சிதம்பரம் கோயிலுக்கும்
டிரான்ஸ்பர் செய்ய தயாரா?
ஒரு குலத்துக்கு ஒரு நீதி
என்பது தான் பர்ப்பனியம்
ஒரு வர்கத்துக்கு ஒரு நீதி
என்பது தான் மறுகாலணியம்!
பன்னாட்டு கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி
பஞ்சமனும், சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி!
முறியடிப்போம்! முறியடிப்போம்!!
பார்ப்பன மதவெறி கும்பலை
முறியடிப்போம்!முறியடிப்போம்!!
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி தேச துரோக கும்பலை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!
கம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு
முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்க வல்ல ஒரே பாதை கம்யூனிசப் பாதை மட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பது கம்யூனிசத்தை நோக்கிய முதல் சமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்தில் அனைவரும் உழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கு ஒவ்வொருவரும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. முதலாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அவர்களும் உழைத்தே ஆக வேண்டும், உழைக்காமல் வாழ முடியாது. சோசலிச சமுதாயத்தில் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களின் தேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம். வலைப்பூவில் சிலர் கம்யூனிசம் தேல்வி அடைந்து விட்டதாக எழுதியதை வாசிக்க நேர்ந்தது, ஆதலால் இந்த பதிவை எழுத வேண்டிய சூழலில் உள்ளேன்.சீனாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதா? இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா? எப்போது சுரண்டலும், முதலாளித்துவம் ஒழிக்கப்படுகிறதோ அது வரை கம்யூனிசத்தின் தேவை இன்றியமையாததாகிறது. முதலாளித்துவத்தின் விதியான உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படும் வரை இந்த வர்க்கப் போராட்டம் ஓயாது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல முதலாளித்துவத்தில் ஏகாதிபத்தியங்கள் தனக்கு கீழே உள்ள காலனி நாடுகளையும், பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளையும், சிறுமுதலாளிகள் உழைக்கும் மக்களையும் சுரண்டுகின்றனர், சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை. சுரண்டப்படும் வர்க்கம் இதனை எதிர்த்து போராடுவது இயல்பே.தற்போதுள்ள சூழலில் நேரடியாக காலனியாதிக்கம் செய்ய முடியாத நிலையில் முதலாளித்துவ நாடுகள் காலனிய ஓப்பந்தங்கள், கலாச்சார சீரழிவுகளின் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளை இப்படிதான் மறுகாலனியாதிக்கத்தை நடைமுறை படுத்துகின்றன.முன் எப்போதும் இல்லாத அளவில் முதலாளித்துவ வர்கத்திற்கும் பாட்டாளி வர்கத்திற்குமான இடைவெளி அதிகரித்து உள்ளது, இது மக்களை சோசலிசத்தை நோக்கி செல்ல வழிவகுக்கிறது. மக்கள் சோசலிசம் நோக்கி திரண்டு போராடுவதை தடுக்கவே WSF, NGOs, ASF போன்ற அமைப்புகள் அமெரிக்காவால் உலகம் முழுவதும் நிறுவப்படுகிறது. இந்த அமைப்புகள் உழைப்பவர்களை ஒன்று படவிடாமல் பிரிக்கின்றன(தலித்துகள், பெண்கள் என்று தனித்தனியாக பிரிக்கின்றன). முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.
குறிப்பு : சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை, முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல் சுரண்டலையும் வறுமையையும் ஒழிக்க முடியாது. இதை கம்யூனிசத்தால் மட்டுமே சாதிக்க முடியும். இதில் வேறு கருத்து உடையவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க தயாராகவே இருக்கிறேன். உங்கள் மாற்று வழியுடன் விவாதிக்க தயாரா?
விவாதம் :
தமிழ்மணி said...
விவாதிக்கலாமே!எங்கே விவாதிக்கலாம்?
October 22, 2007 12:20 PM
ஆசாத் said...
இந்த வலைபூவில் கூட விவாதிக்கலாம்
October 22, 2007 9:46 PM
தமிழ்மணி said...
என் கேள்விகளை என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்உங்கள் பதிவிலும் எழுதுவேன்.
1) கம்யூனிஸ அமைப்பில் கார்கள் இருக்குமா?
October 23, 2007 5:32 AM
ஆசாத் said...
கார்கள் இருக்கும்
October 23, 2007 5:36 AM
தமிழ்மணி said...
கார்கள் இருக்கும் என்றால், கார்களை ஓட்ட சாலைகள் வேண்டும். கார்களை ஓட்ட சாலைகள் இருந்தால், கார்கள் இடது புறம் போகவேண்டுமா வலது புறம் போகவேண்டுமா என்பது போன்ற சட்டங்கள் இயற்றப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றால், யாராவது அவற்றை இயற்றவேண்டும். (மக்களோ மக்கள் பிரதிநிதிகளோ) இது சட்டசபையாக (எந்த வடிவத்திலோ) வந்துவிடும்.சாலைகள் இருந்தால் விபத்துகள் இருக்கும். விபத்துகள் இருந்தால், யாருடைய குற்றம் என்று விசாரிக்க நீதிமன்றம் வேண்டும். குற்றம் என்று வந்துவிட்டால் தண்டனை என்பதும் வேண்டும். தண்டனையை நிறைவேற்ற போலீஸ், ஜெயில் எல்லாம் வேண்டும்.கார் ரிப்பேர் ஆகிவிட்டால் கார் ரிப்பேர் பண்ண ஆள் வேண்டும். கார் மெக்கானிக் எல்லோரும் ஒரே மாதிரியான திறமை உடையவர்கள் அல்ல. ஒரு கார் மெக்கானிக்குக்கு மவுஸ் ஜாஸ்தி ஆகும். அவருக்கு ஏராளமாக வரும் ஆர்டரை எல்லாம் அவரே ரிப்பேர் பண்ண முடியாது. ஆனால், அவர்தான் ரிப்பேர் பண்ணவேண்டும் என்று மக்கள் கேட்டால், "எல்லோரும் எல்லாமும் பெறக்கூடிய கம்யூனிஸம்" எங்கே இருக்கும்?
October 23, 2007 7:13 AM
ஆசாத் said...
கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். அரசின் அங்கங்களான சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்றவை ஏதாவது ஒரு வர்கத்தை(முதலாளி, பாட்டாளி) ஒடுக்குவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன. வர்கங்கள் ஒழிந்த பின்பே கம்யூனிசம் மலர்வதால் அவை தானாகவே உதிர்ந்து விடும். கம்யூனிசத்தை நோக்கிய முதல்படி சோசலிசம், அதுவே பாட்டாளி வர்க்க சர்வதிகாரமாகும். இந்த சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் நீக்கப்பட்டு கம்யூனிச சமூகம் நிறுவப்படும். கார் ரிப்பேர் ஆகிவிட்டால், முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மெக்கானிக்குகள் இருக்கும் சோசலிச சமுகத்தில் ஒரே மெக்கானிக்கிடம் செல்ல வேண்டியிருக்காது. ஒவ்வொருவருடைய தனிச்சிறப்பை கண்டறிந்து, அந்த துறையிலேயே பயிற்சியளிக்கப்படுவதால் அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.
October 23, 2007 8:37 AM
தமிழ்மணி said...
//கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். //
கம்யூனிஸ அமைப்பில் சாலையில் விபத்துகள் நடந்தால் என்ன செய்வீர்கள்?
October 23, 2007 10:31 AM
தமிழ்மணி said...
ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம். சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?
October 23, 2007 10:46 AM
ஆசாத் said...
தமிழ்மணி,நீங்கள் கேட்கும் கேள்வி கம்யூனிச சமூகத்திலா அல்லது சோசலிச சமுகத்திலா? இரண்டுக்குமான வேறுபாடுகளை அறிவீர்கள் என நினைக்கிறேன். எந்த சமூகத்தில் என்பதை உறுதிபடுத்துங்கள்
October 24, 2007 2:29 AM
தமிழ்மணி said...
நான் கேட்பது கம்யூனிஸ அமைப்பில்தான். சோசலிஸ அமைப்பில் அல்ல.கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?நன்றி
October 24, 2007 5:39 AM
ஆசாத் said...
சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர். மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.
October 24, 2007 6:14 AM
ஜமாலன் said...
தோழர் உங்கள் இறுதி பதிலை அவரது விவாதத்தில் விட்டுவிட்டார். //கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?//கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம்? அன்றே ஒருவரை ஒருவர் இன்றுபோல் காலை வாருவது உயர்வு தாழ்வு பார்ப்பது சுரண்டுவது என்கிற வர்க்க அமைப்பாக இருந்தால் குறைவான மக்களைக் கொண்ட அந்த சமூகம் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்திருக்கும். இப்ப யாரும் இங்கு வந்து அணாணியாகி ஜோக் அடித்துக் கொண்டு சைபீரியா என சல்லி அடித்துக் கொண்டிருக்க முடியாது. நன்றி.
October 24, 2007 6:49 AM
தமிழ்மணி said...
//சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர்.//
அப்படியே வைத்துக்கொள்வோம். அதாவது சோசலிஸ சமுதாயத்தில் உருவான விதிகளை தொடர்ந்து பின்பற்றுவீர்கள்.// மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.//
எந்த விதிமுறைகளின் தேவை இருக்காது? புதிய விதிமுறைகளின் தேவை இருக்காதா? பழைய விதிமுறைகளின் தேவை இருக்காதா? //மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.//
கருத்துவேறுபாடு இல்லாத மக்களா? ஒரு முதியவருக்கு 30 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் சாலையில் வண்டிகள் ஓட்டக்கூடாது என்று தோன்றலாம். ஒரு இளையவருக்கு 90 கிலோமீட்டருக்கு மேல் வண்டிகள் ஓட்டலாம் என்று தோன்றலாம். இதற்கும் வர்க்கத்துக்கும் என்ன சம்பந்தம்?
October 24, 2007 7:06 AM
தமிழ்மணி said...
நன்றி ஜமாலன்,இல்லையே. அவரது பதிலையும் எழுதி அதற்கு என் பதிலும் எழுதியுள்ளேனே?
நன்றி
செம்பியன் பரிதி said...
எனக்கும் சில கேள்விகள் உள்ளது
1,நீங்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறீர்கள் ?
2,இந்தியாவில் எப்படி புரட்சி செய்வீர்கள் ?
3,மருதையன் பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது ?
4,உங்கள் அமைப்பிலுள்ள முக்கிய நபர்கள் அனைவருமே பார்ப்பனர்களாகஇருக்கும் போது நீங்கள் தமிழர்களின் விடுதலையை பற்றி பேசுவதை எப்படி நம்புவது ?
5,தமிழ் தேசிய இனம் பற்றி உங்கள் கருத்து என்ன ?என்னுடைய கேள்விகள் உங்கள் மனதை புன்படுத்தும் நோக்கமுடையன அல்ல எனது அய்யங்களை தெளிவு படுத்திக்கொள்ளவே இவற்றை முன் வைத்துள்ளேன் இன்னும் பலகேள்விகள் உள்ளது தொடர்ந்து விவாதிப்போம்.
நன்றிசெம்பியன் பரிதி
October 24, 2007 8:14 AM
பாவெல் said...
தமிழ்மணி கம்யூனிசத்தை தர்க்க அடிப்படையில் விவாதிக்க வக்கற்றுபோய் சிலர் உங்கள் தளத்தில் அவதூறு செய்து மன நோயாளிகளைப்போன்று புலம்பித்திரிகிறார்கள். நீங்கள் இங்கு விவாதித்துக்கொண்டேஇன்னொரு பக்கம் அதை அனுமதிப்பது சரி அல்ல அவர்களுக்கு துணிவும்நேர்மையும் இருந்தால் இங்கு வந்து விவாதிக்கட்டும் அவர்கள் இவ்வாறுசெய்வதை தடுத்து இது சரி அல்ல நாம் விவாதிக்காமல் இப்படி முடிவு செய்யக் கூடாது என்பதை நீங்கள் தான் முறையாக சொல்லியிருக்கவேண்டும் நீங்கள் அதை செய்யாததால் தான் நான் இதை சுட்டிக்காடுகிறேன்.உடனடியாக அந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுகளை அழியுங்கள்அவர்களை இங்கு வரச்சொல்லுங்கள் இல்லை எனில் இங்கு விவாதிப்பதில்அர்த்தமே இல்லை !
October 24, 2007 8:49 AM
ஆசாத் said...
தமிழ்மணி,
நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு. கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது, மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது. அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள். நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.
October 25, 2007 2:02 AM
ஆசாத் said...
தோழர் ஜமாலன்,தமிழ்மணியின் கேள்விக்கு நான் சுறுக்கமான பதிலை தந்திருந்தேன், விரிவாக பதில் த்ந்தமைக்கு நன்றி
October 25, 2007 2:04 AM
ஆசாத் said...
தோழர் பாவெல்,நன்றி,உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன், ஒருபுறம் விவாதம் நடக்கையில் மறுபுறம் அவதூறுகளை தமிழ்மணி அனுமதிப்பதை கண்டிக்கிறேன்.
October 25, 2007 2:07 AM
ஆசாத் said...
தமிழ்மணி,விவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் இது விவாதிக்கும் முறையே இல்லை. இந்த அரைவேக்காட்டு தனமான கருத்துகளை அனுமதிப்பது விவாதத்தை அவமதிப்பதாகும். அவதூறு பரப்பும் கேழைகளே துணிவிருந்தால் என்னுடன் விவாதம் செய்ய தயாரா?
October 25, 2007 2:14 AM
ஆசாத் said...
செம்பியன் பிரிதி,
உங்களுக்கான எனது பதில்,
1.இந்தியா ஒரு தேசமே இல்லை, இது பூணுலால் கட்டப்பட்டது. இந்து-இந்தி-இந்தியா
2.ரஷ்ய பாணியில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிப் பாதை இந்தியாவில் சாத்தியமில்லை இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் புரட்சி ஏற்படுத்துவது சாத்தியமில்லை. நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்கிற வழிமுறைகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
3.மருதையன் ஒரு கம்யூனிச தோழர், அவர் பிறப்பால் பார்ப்பன சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மாறமுடியாது என்பது இயங்கியல் அடிப்படையில் தவறான கருத்தாகும். அவரை மதிப்பிடுவது அவருடைய செயல்பாடுகள்,எழுத்து போன்ற நடைமுறையில் மட்டுமே இருக்க வேண்டும்.
4.மூன்றாவது பதில் இத்ற்கும் பொருந்துமென எண்ணூகிறேன்.
5. வர்க்கப் போராட்டம் என்பது வர்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.உங்களின் ஆரோக்கியமான விவாதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வேறு விவாதம் நடப்பதால் சுறுக்கமான பதிலையே மேலே தந்துள்ளேன். உங்களை நேரில் சந்தித்து விவாதிக்கலாமா? உங்களை தொடர்பு கொள்ள முகவரியோ, தொலைபேசி எண்ணோ கொடுக்கவும்.
October 25, 2007 2:32 AM
தமிழ்மணி said...
என் பதில்
உங்கள் பதிலுக்கு நன்றி நண்பர் ஆசாத்,
//நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு.//
நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.
//கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது,மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது.//
அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள்.
//அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள்.//
// நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.//
அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?
நன்றி
October 25, 2007 8:18 AM
செம்பியன் பரிதி said...
நேரில் சந்தித்து விவாதிக்க நானும் ஆர்வமாகத் தான் இருக்கிறேன் நான் சென்னையில் இருக்கிறேன்நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ?உங்களை சந்திக்க வேண்டுமானால் எங்கே வர வேண்டும் ?உங்கள் முகவரியையும்அலை பேசி எண்னையும் தந்தால்நானே நேரில் வந்து சந்திக்கிறேன்.நன்றி ஆசாத். செம்பியன் பரிதி
October 25, 2007 11:18 PM
ஆசாத் said...
செம்பியன் பரிதி,
மகிழ்ச்சி, நான் சென்னையில் இல்லை, கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.தேழர்கள் பேசுவார்கள்
முகவரி:
முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
அலைபேசி : 9941175876, 23718706.
வரும் நேரத்தை தெரியப்படுத்தவும்.
October 26, 2007 12:23 AM
ஆசாத் said...
தமிழ்மணி,
//நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.//
நான் இதைத்தான் இவ்வளவு முறையாக கூறுகிறேன். கம்யூனிஸ சமூகத்தில் எந்த விதிமுறைகளும் இருக்காது. ஒரு கேள்வி: விதிமுறைகள் எதற்காக யார் உருவாக்குகிறார்கள்?
//அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள். //
//அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?//
ஆம் தன்னிச்செய்யாக செயல்படுவார்கள், அப்போது இருக்கும் மனிதர்கள் அறிவியலிலும், சிந்தனையிலும் பல மடங்கு முன்னேறி இருப்பார்கள். விதிமுறைகள் தேவையில்லை. உங்களுடைய விட்டில் எச்சில் துப்பாமல் இருக்க என்ன விதிமுறை இருக்கிறது? நீங்கள் உங்களுடைய நடு விட்டில் எச்சிலை துப்புவீர்களா?
October 26, 2007 12:38 AM
ஆசாத் said...
தமிழ்மணி,கருத்து என்றால் என்ன?
October 26, 2007 12:41 AM
தமிழ்மணி said...
//இதைத்தான் நானும் சொல்கிறேன், சோசலிச சமூகத்தில் மக்கள் பழகியிருப்பதால் விதிமுறைகள் தேவையில்லை. //
இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.
//தமிழ்மணி நீங்க சின்ன வயசுல அதிகாரத்தால எச்சில் துப்பாமல் இருக்கலாம், பெரியவனான பிறகுமா அதிகாரம் பண்ணுராங்க, பாவங்க நீங்க. வர்க்கம் தோன்றிய காலத்தில் தான் விதிகள் தோன்றின, வர்க்கம் இல்லாத போது அதுவும் தேவையில்லை மேலும், அதிகாரம் இல்லாத மனிதக்குழு புராதண பொதுவுடமை சமூகத்தில் இருந்தது, குழுவாக வேட்டையாடி பகிர்ந்து கொண்டனர். பின் தங்கிய சமூகத்திலேயே இது சாத்தியப்பட்டிருந்தது, ஏன் முன்னேறிய சமூகத்தில் முடியாது? முன்னேக்கி பாருங்க. //
வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.
//அதிகாரம் என்பது ஒருவரை ஒடுக்கவே பயன்படுகிறது. ஒடுக்க வேண்டிய தேவையில்லாத சமூகத்தில் அது தேவையில்லை.உங்களிடன் தொலைநோக்கு பார்வை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு முன்னேறிய சமூகத்தை பற்றி விவாதிக்கும் போது இப்போதுள்ள சூழ்நிலையை ஒப்பிடுவது சரியா? நீங்க மறுத்தாலும் உங்க விவாதத்தில் அது நன்றாகவே தெரியுது.26. Oktober 2007 08:32//
இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.நன்றி
October 26, 2007 8:50 AM
ஆசாத் said...
தமிழ்மணி,
//இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.//
நான் உதாரணத்தோடு கூறியும் தக்க காரணம் சொல்லாமல் மறுப்பது விவாதமல்ல. நீங்கள் உங்களுடைய முடிவை திணிக்கின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்களை வீட்டில் அதிகாரம் செய்வதில்லை ஆனாலும் நீங்கள் வீட்டில் எச்சில் துப்புவது கிடையாது, ஏன்? அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா? தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா? அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா? உங்கள் உடலின் மீதுள்ள பொறுப்பில்லையா?
//வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.//
பகிர்வது கூட ஒரு விதியா? அதில் அனைவரின் உழைப்பு இல்லையா? அது அவர்களின் உரிமையில்லையா? இதில் எங்கே விதிமுறை வந்தது? நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன? கம்யூனிசத்திற்கு தவிர்த்து உங்கள் மாற்று வழிதான் என்ன?
//இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.//
அப்ப விதிமுறை இல்லாம வாழ முடியாது? இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்?விவாதிக்கச் சொன்னா நீங்க உங்க முடிவை திணிக்க முயற்ச்சிக்கைறிங்க.
நன்றி.
More Recent Articles
|