இந்த பஞ்சாமிர்த பதிவுகள் இதழில்...
|
|
 ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே என்றி எண்ணியிருந்த அடியேனுக்கு இன்று தான் அவரின் மற்றைய முகங்களின் அறிமுகம் கிடைத்தது. காணொளிகளின் திரட்டுற்கு செல்ல… (பட உதவி - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் முகப்புத்தகம்)
“நான் யார்?" என்ற தலைப்பில் ரமணர் குறித்து வைத்தியர் சுதா சேஷய்யன் அவர்கள் ஆற்றும் அருமையான சொற்பொழிவு இது.
 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் முருகன் பற்றி அவனது குணாதியங்கள் பற்றி சுதா சேஷய்யன் அவர்களின் அருமையான சொற்பொழிவு இது. (தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல!) ஒலிக் கீற்றினை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்.
 பாரதியார் குறித்து யார் உரையாற்றினாலும் அலுக்காமல் கேட்கலாம். காரணம் புத்துணர்ச்சி தரும் புரட்சிக் கருத்துக்கள்! இந்தப் பதிவில் சினீவாசன் அவர்கள் ஆற்றிய உரையை தருகிறேன். முன்பு நான் கேள்விப்படாத பல தகவல்களை இவரின் உரையினூடாகக் கேட்டு மெய்சிலிர்ப்பு ஏற்பட்டது. இந்த அருமையான உரையை இணையத்தில் தரவேற்றிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல. ஒலிக்கீற்றை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்
 நன்கு அறியப்பட்ட குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் சிவசங்கரி அவர்கள். எழுத்தைத் தவிர வேறு பல தளங்களிலும் இயங்கி வரும் அவரின் உரை ஒன்றை அண்மையில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. “உன்னை அறிந்தால்” என்ற பொருளில் அமைந்த அந்த உரையின் காணொளி மற்றும் ஒலிக் கீற்றை சம ஆர்வம் உள்ள அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஒலிக்கீற்றை தரவிறக்க இங்கே அழுத்துங்கள் புகைப்பட மூலம் - www.sivasankari.com
|